ஒரு மனிதனுடைய அங்கங்களின் அசைவுகள் மற்றும் தலை எழுத்தை நிர்ணயம்
செய்வது கைரேகை ஆகும்.எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்
சோதிடத்தன் தொடர்புடையவை எண் கணிதம்.
மனிதன் பிறந்த தேதியை மாற்ற முடியாது ஆனால் பிறந்த தேதிக்கு அதிர்ஷ்டமான
பெயரை வைத்துக்கொள்ளலாம்.நவ கோள்களின் நல்ல தீய சக்திகளின் பிரதிபலிப்பை தாங்கும் வல்லமை நவரத்தின கற்களுக்கு உண்டு.
உடலில் உள்ள நோய்களை நீக்கும் தன்மை உடையது.பஞ்ச பூதங்களின் வஸ்துவே வாஸ்து. வீடு, அலுவலகம்
இவைகளை இயக்கும் சக்தி வாஸ்துவுக்கு உண்டு.

Visitors

Free Web Counters


ஜோதிடம் என்பது அறிவியல் மருத்துவம், மற்றும் இறைநம்பிக்கை இந்த மூன்றையும் கொண்டதாகும். இந்த மூன்றிலும் அனுபவம் கொண்டவர்களைத்தான் ஜோதிடர் என்று கூறுகிறோம். ஜோதிடத்துறையில் நியுமரலாஜி (எண் கணிதம்) வாஸ்து, (வீடு, மனை பற்றியது) மெடிக்கல் அஸ்ட்ரலாஜி (மருத்துவம் பற்றிய ஜோதிடம்) இவை அனைத்திலும் தீர்வு கூறிவருகிறேன். நான் தமிழ் இலக்கியத்தில் ஆர்வம் கொண்டு வைணவத்தில் 108 திவ்ய தேசத்தில் ஒன்றான நாங்குநேரி வானமாமலை கோயிலில் தொடர்ச்சியாக ஆண்டுதோறும் சொற்பொழிவு ஆற்றிவருகிறேன். மேலும் ஜோதிடத்தில் நல்ல அனுபவம் மற்றும் பட்டங்கள் பெற்று பயிற்சி வகுப்புகளும் நடத்தி வருகிறேன்.
பட்டங்கள் : ஜோதிட மாமணி ஜோதிட திருநாவுக்கரசர்

கரண் தொலைக்காட்சியில் ஆன்மீக. ஜோதிட சொற்பொழிவாளர்

எழுத்து துறை:
கடந்த 12 ஆண்டுகாலமாக குரு பெயர்ச்சி, சனி பெயர்ச்சி, புத்தாண்டு பலன் இவை அனைத்தும் தேவி, ராணி, பெண்மனி இதழ்களில் எழுதி வருகிறேன். ஜோதிட பத்திரிக்கையான ஜோதிட முரசு, ஜோதிட ஞானசிந்தாமணி போன்ற இதழ்களில் ஜோதிட ஆராய்ச்சி கட்டுரை எழுதி வருகிறேன்.